iPhone 12 அறிமுகமாவதில் தாமதம்..!!

ஆப்பிள் நிறுவனம் இவ்வருடம் தனது பிரதான ஸ்மார்ட் கைப்பேசியானது iPhone 12 இனை அறிமுகம் செய்யவுள்ளது.

தனது ஐபோன்களை பொதுவாக ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் மாதத்திலேயே ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்து வருகின்றது.

எனினும் இவ்வருடம் சற்று காலதாமதம் ஆகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பிரதான காரணமாக உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் காணப்படுகின்றது.

இந்த தகவலை Bank of America தெரிவித்துள்ளது. இதன்படி ஏறத்தாழ ஒரு மாத காலம் தாமதமாகலாம் என தெரியவருகின்றது.

எனினும் செப்டம்பர் மாதத்திற்கு சில மாதகாலம் இருக்கின்ற நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைவடையின் திட்மிட்டது போலவே குறித்த மாதத்தில் அறிமுகம் செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.