வழமையாக ஐபோன்கள் மற்றும் ஐபேட்களை துடைப்பதற்கு வெவ்வேறு துடைப்பான்களை பயன்படுத்தக்கூடாது என ஆப்பிள் நிறுவனம் பயனர்களிடம் கேட்டுக்கொண்டது.
எனினும் தற்போது வெவ்வேறு துடைப்பான்களை பயன்படுத்துவதை ஆப்பிள் நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கவே இந்த யோசனையை ஆப்பிள் நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது.
மேலும் இவ்வாறு துடைப்பதற்காக Clorox Disinfecting Wipes பயன்படுத்த முடியும் எனவும், இதில் 70 சதவீதம் ஐசோப்ரொபில் அல்கஹோல் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே ஐபோன்களை மாத்திரமன்றி ஏனைய இலத்திரனியல் சாதனங்களையும் துடைப்பதற்கு இதனைப் பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.