வாழப்போகும் வீடு, ஒருவரின் வாழ்க்கையை உயர்த்தவும் செய்யும், விருத்தி அடையவும் வைக்கும்.
எனவே நல்ல நாள், நேரம் பார்த்து புதுமனைக்கு குடிபுகுவது சிறந்ததாகும்.
அந்தவகையில் தற்போது கிரக பிரவேசம் செய்ய உகந்த நாள், மாதங்கள், நேரம் என்பவற்றைப் பற்றி இங்கு பார்ப்போம்.
- சித்திரை, வைகாசி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாதங்களில் உகந்தது.
- அசுவினி, ரோகினி, மிருகசீருஷம், புனர்பூசம், உத்திரம், அஸ்தம், சுவாதி, மூலம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி முதலிய நட்சத்திரங்கள் சிறந்தது.
- திங்கள், புதன், வியாழன், வெள்ளி, ஆகிய தினங்களில் சித்த அல்லது அமிர்த யோகம் உள்ள சமயமாகும்.
- ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம் ஆகிய லக்கனங்கள்.
- மேற்கூரை கட்டாமலும் கதவு போடாமலும் சுவர் தரை பூசாமலும் புதுமனை கிரகப்பிரவேசம் நடத்தக் கூடாது.
- கிரகப்பிரவேசத்தை அதிகாலை 4 மணி முதல் 6 மணிக்குள்ளும் லக்ன முகூர்த்தங்களான 6-7 நேரங்களிலும் வைக்கலாம்.
- ஆனி, ஆடி, புரட்டாசி, மார்கழி, மாசி மற்றும் பங்குனி போன்ற மாதங்களில் வீடு கட்ட தொடங்குவது, புது வீட்டிற்கு குடி போகுதல் போன்ற சுப காரியங்கள் செய்வதை தவிர்ப்பது மிகவும் நல்லது.
- சித்திரை, வைகாசி, கார்த்திகை, தை ஆகிய மாதங்கள் கிரகப் பிரவேசம் செய்ய ஏற்ற மாதங்கள் என்றாலும், வீட்டின் உரிமையாளர் இந்த மாதங்களில் ஏதேனும் ஒன்றில் பிறந்திருந்தால் அந்த மாதத்தில் கிரகப் பிரவேசம் நடத்தக் கூடாது.
- காலை 9 மணிக்குப்பிறகு கிரகப்பிரவேசம் செய்தல் கூடாது. அதிகாலை 4 மணிக்குத் தொடங்கும் கிரகப்பிரவேச வழிபாட்டிற்கு 5 மணிக்கு வந்து அவசரமாகவும், ஏனோ தானோ என்று செய்தல் வேண்டாம்.
- வீட்டின் உரிமையாளர், அது கணவனாகவோ அல்லது மனைவியாகவோ யாராயிருந்தாலும், அவர்களின் சந்திராஷ்டம நாட்களிலும், கரி நாளிலும் சுப காரியங்கள் செய்யக் கூடாது.