தொப்பையை குறைக்க இதோ சூப்பர் டயட் திட்டம்!

இன்றைய சந்ததியினருக்கு தொப்பை பிரச்சினை பெரும் தலையிடியாக உள்ளது. இதற்கான பலர் மருத்துவரின் ஆலேசனையின்றி கண்ட கண்ட டயட்டுகளை பின்பற்றுவது தான் வழக்கம்.

மேலும் இதற்காக கடின உடற்பயிற்சிகளை செய்தால் கூட இந்த தொப்பை என்பது குறைந்த பாடில்லை.

இருப்பினும் சில ஆரோக்கியமான டயட்டுகளை மேற்கொண்டால் தொப்பை பிரச்சனையிலிருந்து தீர்வு காண முடியும்.

இந்த டயட் திட்டத்தை பின்பற்றுவதனால் 7 நாட்களில் வியத்தகு மாற்றத்தை கொண்டு வர முடியும்.

அந்தவகையில் தற்போது அந்த டயட் திட்டத்தினை எப்படி செயற்படுத்தலாம் என இங்கு பார்ப்போம்

நாள் 1

காலை : 3 முட்டையின் வெள்ளைக்கரு, 75 கிராம் மிளகுத்தூள் மற்றும் ஒரு கைப்பிடியளவு கீரை

காலை ஸ்நாக்ஸ் : 100 கிராம் சிக்கன் மற்றும் 1/2 சிவப்பு மிளகாய் நறுக்கியது.

மதியம் : க்ரில்டு சிக்கன் நெஞ்சுக்கறி, சாலட் இலைகள், சிவப்பு மிளகாய், பச்சை பீன்ஸ், 1/4 டீ ஸ்பூன் ஆலிவ் ஆயில்

மதிய ஸ்நாக்ஸ் : 100 கிராம் டர்கி மீன் உடன் 1/4 பங்கு வெள்ளரிக்காய் சேர்த்து சாப்பிடுங்கள்

இரவு : 100 கிராம் க்ரில்டு சிக்கன் மற்றும் வேக வைத்த ப்ரக்கோலி.

​நாள் 2

காலை : பேக்டு சிக்கன் ஒரு கைப்பிடி அளவு வதக்கிய கீரை

காலை ஸ்நாக்ஸ் : 100 கிராம் மீன் இறைச்சி, 1/2 பச்சை மிளகாய் நறுக்கியது

மதியம் : வேக வைத்த மீன் மற்றும் க்ரீன் சாலட், 1/2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில்

மதிய ஸ்நாக்ஸ் : 100 கிராம் டர்கி உடன் 75 கிராம் வேக வைத்த பிரக்கோலி .

இரவு : 1 சால்மன் மீன், வெந்தய இலைகள் மற்றும் வேகவைத்த பீன்ஸ்

​நாள் 3

காலை : 100 கி சுட்ட சால்மன் மீன் மற்றும் கீரை

காலை நேர ஸ்நாக்ஸ் : 100 கி சிக்கன் உடன் 1/2 மஞ்சள் பச்சை மிளகாய் நறுக்கியது

மதியம் : 1 க்ரில்டு சிக்கன் மற்றும் சாலட் 1/2 டீ ஸ்பூன் ஆலிவ் ஆயில்

மதிய ஸ்நாக்ஸ் : 100 கிராம் டர்க்கி துண்டுகளுடன் 1/4 அவகேடா பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.

இரவு : க்ரில்டு ஆட்டிறைச்சியுடன் வேக வைத்த ப்ரக்கோலி மற்றும் கீரைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

​நாள் 4

காலை : முட்டை துருவல் (முழு முட்டை அல்லது 2 வெள்ளைக்கரு), தக்காளி, பீன்ஸ் போட்டு எடுத்துக் கொள்ளுங்கள்

காலை ஸ்நாக்ஸ் : 100 கிராம் டர்கி துண்டுகளுடன் 1/4 வெள்ளரிக்காய் நறுக்கியது

மதிய உணவு : பேக்கிடு காட் வகை மீன் உடன் சாலட், தக்காளி, கீரை மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில்

மதிய ஸ்நாக்ஸ் : 100 கிராம் சிக்கன் மற்றும் 1/2 நறுக்கிய வெள்ளரிக்காய்

இரவு உணவு : 1/2 டீ ஸ்பூன் ஆயிலுடன், பச்சை காய்கறிகள் சேர்த்து 100 கிராம் சிக்கன் சேர்த்து எடுத்துக் கொள்ளுங்கள்.

​நாள் 5

காலை : 200 கிராம் டர்கி மீனுடன் 1/4 அவகேடா மற்றும் 1/4 வெள்ளரிக்காய் நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள்

காலை ஸ்நாக்ஸ் : 2 வேக வைத்த முட்டை 1/2 சிவப்பு மிளகாய் நறுக்கி சேர்த்து எடுத்து கொள்ளுங்கள்.

மதியம் : 150 கிராம் க்ரில்டு பிரான் உடன் பச்சை காய்கறிகள் சாலட், தக்காளி மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து எடுத்துக் கொள்ளுங்கள்.

மதிய ஸ்நாக்ஸ் : 100 கி டர்கி மீனுடன் 5 பாதாம் பருப்பு சேர்த்து எடுத்துக் கொள்ளுங்கள்

இரவு : 100 கி சிக்கன் மற்றும் வேக வைத்த ப்ரக்கோலி சேர்த்து எடுத்துக் கொள்ளுங்கள்.

​நாள் 6

காலை : 1 க்ரில்டு மீனுடன் வறுத்த மிளகு மற்றும் வெள்ளரிக்காய் சேர்த்து எடுத்துக் கொள்ளுங்கள்.

காலை ஸ்நாக்ஸ் : 100 கிராம் வேக வைத்த சிக்கன் மற்றும் 1 தக்காளி நறுக்கியது சேர்த்து எடுத்துக் கொள்ளுங்கள்

மதியம் : 150 கிராம் டர்கி உடன் பச்சை காய்கறிகள் சாலட், வேக வைத்த ப்ரக்கோலி, 1/2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில்,

மதிய உணவு ஸ்நாக்ஸ் : 100 கி சிக்கன் மற்றும் 5 பீகான் நட்ஸ் சேர்த்து சாப்பிடுங்கள்.

இரவு உணவு : 150 கி – 200 கி வேக வைத்த பச்சை பீன்ஸ் மற்றும் பிரக்கோலி சேர்த்து எடுத்து கொள்ளுங்கள்.

​நாள் 7

காலை : 3 வெள்ளைக்கரு ஆம்லெட், தக்காளி நறுக்கியது மற்றும் வேகவைத்த கீரை இவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.

காலை ஸ்நாக்ஸ்: 100 கிராம் டர்க்கி மீனுடன் 5 பிரேசில் நட்ஸ் வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள்

மதிய உணவு : 150 கிராம் வேக வைத்த சிக்கன் மற்றும் அஸ்பாரகஸ், பச்சை காய்கறிகள் சாலட் இவைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

மதிய ஸ்நாக்ஸ் : 100 கி டர்கி மீனுடன் 1/4 வெள்ளரிக்காய் சேர்த்து நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.

இரவு உணவு : க்ரில்டு வாத்து கறி வேக வைத்தது, பச்சை காய்கறிகள் அல்லது பிராக்கோலி சேர்த்து சாப்பிடுங்கள்.