அறிமுகம் செய்யப்பட்டது Vivo V19 ஸ்மார்ட் கைப்பேசி

Vivo நிறுவனம் தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியான V19-யினை அறிமுகம் செய்துள்ளது.

முதன் முறையாக இந்தோனேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இக் கைப்பேசியானது 6.44 அங்குல அளவுடைய AMOLED Full HD+ தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

இவற்றுடன் Snapdragon 675 processor, பிரதான நினைவகமாக 8GB RAM மற்றும் 128GB அல்லது 256GB சேமிப்பு நினைவகத்தினையும் உள்ளடக்கியுள்ளது.

மேலும் 32 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, 48 மெகாபிக்சல்கள், 8 மெகாபிக்சல்கள், 2 மெகாபிக்சல்களை உடைய 3 பிரதான கமெராக்களும் தரப்பட்டுள்ளன.

இக் கைப்பேசியானது அன்ரோயிட் 10 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட Funtouch OS 10 இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாக இருக்கின்றது.

128 GB சேமிப்பு கொள்ளளவுடைய கைப்பேசியின் விலையானது 300 டொலர்களாகவும், 256GB சேமிப்பு கொள்ளளவுடைய கைப்பேசியின் விலை 350 டொலர்களாகவும் காணப்படுகின்றது.