திடீரென்று புதிய தொழிலை ஆரம்பித்த நேர்கொண்ட பார்வை பட நடிகை!
அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் தற்போது தொழிலதிபராக அவதாரம் எடுத்து உள்ளார்.
இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என அனைத்து மொழி திரையுலகிலும் கலக்கி வரும் நிலையில் தொழிலதிபராகவும் களமிறங்கியுள்ளமை ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.
சென்னை வேளச்சேரியில் ‛பெர்சி’ என்ற பெயரில் கபே ஒன்றை திறந்து உள்ளதாக அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பது, எனது ஓட்டல் சிறியதாக இருந்தாலும் கண்டிப்பாக நல்ல உணவு கிடைக்கும். இது கபே ரெஸ்டாரண்ட்களை விட சிறியது, ஆனால் மற்ற கபேக்களை விட வித்தியாசமானது என்றும் கூறியுள்ளார்.
இதேவேளை, உணவுடன் சிறந்த உறவை நோக்கிய எனது பயணத்தில் சுத்தமான, ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு ஒரு படி நெருக்கமாக இருக்கிறது. இதனால் கபேயை அறிமுகப்படுத்துவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இவர் ஹோட்டல் திறந்த தகவலை அறிந்த ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.