இலத்திரனியல் சாதனங்களை பயன்படுத்துவதன் ஊடாகவும் கொரோனா வைரஸ் பரவும் சாத்தியம் இருப்பதாக அண்மையில் தகவல் வெளியாகியிருந்தது.
இதனையடுத்து சாம்சுங் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக புதிய சேவை ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.
இது Galaxy Sanitizing Service என அழைக்கப்படுகின்றது.
இதன் மூலம் ஸ்மார்ட் கைப்பேசிகள், ஸமார்ட் கடிகாரங்கள் மற்றும் பட்ஸ் (Buds) என்பவற்றினை தொற்று நீக்கம் செய்து கொடுக்கவுள்ளது.
அதாவது UV-C கதிர்களைப் பயன்படுத்தி இந்த தொற்று நீக்கம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இச் சேவையினை இந்தியா உட்பட உலகின் மேலும் பல நாடுகளில் தமது சாம்சுங் ஸ்டோரின் ஊடாக வழங்க முன்வந்துள்ளது.
எனினும் சாம்சுங் சாதனைங்களை மாத்திரமே இச் சேவையின் போது தொற்றுநீக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.