நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் எடுத்த அதிரடி முடிவு

தமிழில் 2010ஆம் ஆண்டு வெளிவந்த ‘நீதானா அவன்’ எனும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

இதன்பின், பல படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார். ஆனால் காக்க முட்டை என்ற படம் தான் இவரின் திரையுலக பயணத்திற்கு மிக முக்கியமான ஒரு படமாக அமைந்தது.

இதனை தொடர்ந்து தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் நடிக்க துவங்கினார் ஐஸ்வர்யா.

இவர் எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தலும் துணிந்து எடுத்து நடிக்க கூடிய ஒரு நடிகை என்று கூட கூறலாம்.

ஆம் ஒரு படத்தில் இரண்டு பிள்ளைகளுக்கு அம்மாவாக நடித்தாலும் மற்றொரு படத்தில் இளம் வயது கதாநாயகியாகவும் நடித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் கொடுத்த பேட்டி ஒன்றில் “அம்மா வேடத்தில் நடித்தால் என்ன பிரபல நடிகர்கள் தவிர்க்கிறார்கள். அதனால் இனி நான் அம்மாவாக எந்த படத்திலும் நடிக்க போவதில்லை என்று தனது அதிரடியாக முடிவை கூறியுள்ளார் தகவல்கள் வெளியாகியுள்ளது.