பாலிவுட் சினிமாவில் பல படங்களில் நடித்து, முன்னணி நடிகையாக இருப்பவர் மலைக்கா அரோரா. இவர் நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கான் என்பவரை காதலித்து கடந்த பல வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் அவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தது வாழ்ந்து வருகின்றனர். மேலும் மலாக்காவிற்கு 16 வயது நிறைந்த மகன் ஒருவர் இருக்கின்றார்.
இந்நிலையில் மலைக்கா ஸ்ரீதேவி-போனிகபூரின் மகன் அர்ஜூன் கபூரை காதலிப்பதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தகவல்கள் வெளிவந்தது. மேலும் இதற்கு போனிகபூர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்பட்டது.
அர்ஜுன் கபூர், மலைக்கா அரோராவை வரும் ஏப்ரல் 19ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் வெளிவரவில்லை. சமீபத்தில், பிரபல விழா ஒன்றுக்கு வந்த மலைக்கா அரோரா மிகவும் கவர்ச்சியான உடையில் வந்து ரசிகர்களின் கவனத்தை சிதறடித்தார்.
இந்நிலையில், தற்போது அவர் தனது யோகா ஸ்டுடியோவிற்கு செல்லும் போது அணிந்துள்ள உடை குறித்த புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது. அவரது உடல் நிறத்திலேயே இருக்கும் அந்த ஆடை மிகவும் ஒட்டி இருப்பதால் அவர் ஆடை அணிந்து இருக்கின்றாரா என்ற சந்தேகமே ஏற்பட்டுவிட்டது. இதற்கு மிகவும் மோசமான விமர்சங்களை ரசிகர்கள் வைத்து வருகின்றனர்.