நடிகை காஜல் அகர்வால் தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். தமிழில் பழனி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானார். அதன்பின் தமிழ் ,தெலுங்கு என பல முன்னணி நடிகர்ளுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.
மேலும், ஹிந்தியில் வெளியான குயின் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான பாரிஸ் பாரிஸ் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இவர் கமிட்டான இந்தியன் 2 படபிடிப்பில் ஏற்பட்ட விபத்தால் தற்போது மற்றப்படங்களில் டேட்டினை முடித்து தர பிஸியாக இருந்து வருகிறார்.
இதுவரை ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வந்த இவர் முதல்முறையாக ஹீரோயின் சென்ட்ரிக் படத்தில் நடித்துள்ளதால். இப்படம் ஹிட்டாகும் என மிகவும் நம்பியுள்ளார்.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் குளத்தில் சிறிய உடையில் துள்ளி விளையாடும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் இணைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.