கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் சேர்ந்து, அதனைக் கடந்து வெற்றி கொள்வோம் என கனடா பிரதமரின் மனைவி சோபியே கிரேகொய்ரே குறிப்பிட்டுள்ளார்.
சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், உலக நாடுகளில் மிக வேகமாக பரவிவருகிறது. இந்த வைரஸ் தாக்கத்திற்கு முக்கிய அரசியல் தலைவர்கள் பிரபலங்கள் என்று பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் பாரியார் சோபியே கிரேகொய்ரேவும் இக்கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கும் வைரஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்நிலையில், அவர் கணவர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு உருக்கமான அறிக்கையொன்றை டுவிட் மூலம் பகிர்ந்துள்ளார்.
அவரின் டுவிட்டில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
என்னிலை அறிந்து எனக்காக பிரார்த்திக்கும் அனைவருக்கும் நன்றி. என்னைப் போன்று பாதிக்கப்பட்ட அனைவரை போலவும் நானும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளேன். கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் சேர்ந்து, அதனைக் கடந்து வெற்றி கொள்வோம். நான் கண்டிப்பாக மீண்டு வருவேன் ” என்று குறிப்பிட்டுள்ளார்.