தமிழ், மலையாளம், தெலுங்கு என்று மூன்று மொழி படங்களிலும் பிரபல முன்னணி நடிகையாக நடித்து வருபவர் நடிகை அனுஷ்கா. இவர் உடல் எடை கூடி விட்டதால் பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தார்.
இதை தொடர்ந்து, தற்போது சைலன்ஸ் என்னும் படத்தில் நடித்துள்ளார். அந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில், எடை கூடி வாய்ப்புகள் பறி போனதால் வெளிநாடு சென்று தீவிர சிகிச்சை மேற்கொண்டு மீண்டும் ஸ்லிம்மாக மாறினார்.
ஆனால், தற்போது அனுஷ்கா மீண்டும் பழையபடி குண்டாகி விட்டார். இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவரது புகைப்படம் ஒன்று வைரலாகி ரசிகர்களை ஷாக்காகியுள்ளது.