கடந்த 2016ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான கிரிக் பார்டி என்ற படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான ராஷ்மிகா மந்தானா. இந்த படம் செம்ம ஹிட்டானது. கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படத்தில் தனது வெகுளியான நடிப்பால ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார்.
ராஷ்மிகா தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக மிகவும் இளம் வயதிலேயே வளர்ந்து நிற்கிறார்.
வெங்கி குடுமுலா இயக்கத்தில் நிதினுடன் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான பீஷ்மா படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
பீஷ்மா படத்தின் புரொமோஷனின்போது ராஷ்மிகா மந்தானா கொடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படங்கள் வைரலானது. இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா புடவை அணிந்து நடத்திய போட்டோஷாப்பின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதனை கண்ட ரசிகர்கள் ஆர்வத்துடன் இதனை வைரலாக்கி வருகின்றனர்.