பிரான்ஸ் நாட்டினை சார்ந்த மருத்துவர் ஜோயல் லீ ஸ்கவுர்னக் (வயது 69). இவர் மருத்துவத்துறையில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில், தனது உறவினரின் பெண்கள் இரண்டு பேர், பக்கத்துக்கு வீட்டில் வசித்த வந்த பெண்ணின் மகள் மற்றும் ஒரு நோயாளி என நான்கு பேரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக புகார்கள் அடுத்தடுத்து எழவே, இந்த வழக்கில் காவல் துறையினர் அதிரடியாக மருத்துவரை கைது செய்தனர். பின்னர் இவரது இல்லத்தில் மேற்கொண்ட சோதனையில் பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பான புகைப்படம் மற்றும் விபரங்களை எழுதிய நோட்டு புத்தகம் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையானது அங்குள்ள நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் சுமார் 350 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து தன் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் தொல்லை குற்றசாட்டுகளை ஒப்புக்கொண்ட ஜோயல், பலாத்காரம் தொடர்பான குற்றசாட்டுகளை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக குற்றசாட்டுகள் உறுதியாகும் பட்சத்தில், 20 வருட சிறைத்தண்டனை கிடைக்கலாம் என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.