சுற்றுலா தளமான புதுச்சேரியில் காதலர்கள் அவ்வப்போது வந்து உல்லாசமாக சுற்றி பார்த்துவிட்டு அங்கு இருக்கும் ஓட்டல்களில் அறை எடுத்து தங்குவது வழக்கமாக நடைபெறும் ஒன்றுதான். இதுபோலவே புதுச்சேரி ஓட்டலில் தங்கும் அவர்களிடம் காவல்துறையினரே அத்துமீறி இருக்கும் சம்பவமொன்று தற்பொழுது நடந்து இருக்கின்றது.
ஓட்டல் அறையில் தங்கியிருந்த தம்பதிகளிடம் சோதனை என்ற பெயரில் காவல்துறையினர் பத்தாயிரம் ரூபாயை பறித்து கொண்டு விட்டதாகவும், மற்றொரு ஜோடி இடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய தாகவும் காவல்துறை மேலிடத்துக்கு புகார் சென்றுள்ளது.
இதனையடுத்து இந்த தகவலை உறுதி செய்துகொண்ட காவல்துறையினர் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவலர்கள் சதீஷ்குமார் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றனர்.
காவலாக இருக்க வேண்டிய காவல்துறையினரே இப்படி காமத்திற்கு பெண்ணை இரையாக்கி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.