கொரோனா தொற்று பரவாமல் தடுக்க ……… பேஸ்புக் நிறுவனர் மார்க் அளித்த உதவி!!

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் ஆனது உலக நாடுகளில் பரவி அதன் தாக்கத்தை அதிகரித்து வருகிறது. இதனை தடுப்பதற்காக உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மேலும் வைரஸை தடுப்பதற்கு தீவிரமான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றன.

இதனை தொடர்ந்து, கொரோனா தாக்குதலுக்கு நடவடிக்கை எடுப்பதற்காக பல்வேறு தனியார் நிறுவனங்கள் அவர்களது சார்பில் நீதிகள் வழங்கி வருகிறது. அந்த வகையில் பேஸ்புக் நிறுவனம் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 20 மில்லியன் டாலர்கள் அளித்திருக்கிறது.

இது குறித்து, ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் அவரது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கொரோனா தடுப்பதற்காக உலகசுகாதார அமைப்புக்கு 10 மில்லியன் டாலரும்,CTC தொண்டு நிறுவனத்திற்கு 10 மில்லியன் டாலரும் ஆக மொத்தம் 20 மில்லியன் டாலர்கள் நன்கொடை பேஸ்புக் நிறுவனம் சார்பில் வழங்குகிறது என்று அந்த அறிவிப்பில் தெரிவித்திருந்தார். மேலும் இதுபோல் மைக்ரோசாப்ட் மற்றும் அமேசான் நிறுவனங்களும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நிதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.