கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. நேரில் பார்த்த மகன்.. மகளின் வாழ்க்கையை சீரழித்த தாய்..

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பளூகல் மலையடிவார பகுதியை சார்ந்தவர் வசந்தா (வயது 39). இவரது கணவரின் பெயர் மோகன். இவர்கள் இருவருக்கும் இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர். கணவருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சனையில், கணவரை பிரிந்த வசந்தா குழந்தைகளோடு தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னதாக இவரது மகன் லால் கிருஷ்ணன் (வயது 13) அதிகளவு தூக்க மாத்திரை சாப்பிட்டதாக கூறி திருவனந்தபுரம் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த வழக்கை காவல் துறையினர் தற்கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

மேலும், சிறுவனின் கழுத்து பகுதியில் காயம் இருந்ததும், தொண்டையில் தூக்க மாத்திரை சிக்கி இருந்ததும் பிரேத பரிசோதையில் தெரியவந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக மேற்கொண்ட விசாரணையில், வசந்தா தனக்கு ஏதும் தெரியாது என்று கூறியுள்ளார். இந்த சமயத்தில், வசந்தாவின் கள்ளக்காதலன் சுபனன் (வயது 35) என்பவனிற்கு தனது மகளை இரகசியமாக திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

இந்த விஷயத்தை அறிந்து கடுமையான ஆத்திரமடைந்த மோகன் மற்றும் இப்பகுதியை சார்ந்த மக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் விசாரணை மேற்கொள்ள கூறி புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த விசாரணையில், மகனின் கொலையை வசந்தா ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த விஷயம் தொடர்பாக வாக்குமூலத்தில், சுபனனுக்கும் எனக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் பின்னாளில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் நாங்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தோம். சம்பவத்தன்று எனது மகன் லால் கிருஷ்ணன் பள்ளியில் இருந்து விரைவாக வந்து எங்களின் உல்லாச வாழ்க்கையை கண்டுகொண்டுள்ளான்.

நாங்கள் இருவரையும் அவனை பார்த்தவுடன், அவன் வெளியே ஓட முயற்சிதான். அவனை பிடித்து கழுத்தை இறுக்கி வாயில் தூக்க மாத்திரையை போட்டு தண்ணீரை ஊற்றி பின்னர் திருவனந்தபுரம் மருத்துவமனையில் அனைவரையும் நம்ப வைக்க அனுமதி செய்தோம். எங்களின் எண்ணப்படி திருவனந்தபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தான். சுபனனிற்கு தெரிந்த காவல் அதிகாரி மூலமாக சமாளித்து வந்த நிலையில், தற்போது மாட்டிக்கொண்டோம் என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து வசந்தா மற்றும் சுபனன் கைது செய்யப்பட்டுள்ளனர்.