தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் விஜய் மற்றும் ஜோதிகா நடிப்பில் எஸ்.ஜே சூர்யா இயக்கிய படம் குஷி. இந்த திரைப்படத்தில் மும்தாஜ் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதில் வரும் மாக்கரீனா என்னும் பாடலுக்கு விஜய்யுடன் சேர்ந்து பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி நடனமாடியிருப்பார்.
இதை தொடர்ந்து பிரபுதேவாவின் Mr. ரோமியோ திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். தற்போது இவர் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது அவரது ரசிகர் மத்தியில் வைரலாகி வருகிறது.
உலக நாடுகளை, தொடர்ந்து தற்போது இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதன் தாக்கத்தால் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் பள்ளிகள், அலுவலகங்கள் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நடிகை ஷில்பா ஷெட்டி வெளியிட்டுள்ள வீடியோவில், “இந்த நேரத்தில் ஜிம்முக்கு போகாதீர்கள், வீட்டில் இருக்கும் படிக்கட்டில் ஏறி இறங்குங்கள், ஒரு வாரத்திற்கு 4 முறை உடற்பயிற்சி செய்யுங்கள், அப்படி செய்தால் எதுவும் உங்கள் பக்கமே வராது” என்று பேசியுள்ளார். அவர் வெளியிட்டிருந்த இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.
(1/2)
Paucity of time is a major reason for missing out on exercise for many. Let’s utilise this 'precious' time to take care of ourselves by exercising at least 4 times a week and building a stronger immunity. Here’s how you can pack in a proper routine using just the staircase. pic.twitter.com/dvODTPNaH4— SHILPA SHETTY KUNDRA (@TheShilpaShetty) March 16, 2020