ஒரே ஒரு ராசியை குறி வைக்கும் குரு…. உக்கிர சனியால் ஏற்பட போகும் குழப்பம்!

பல்வேறு சிறப்புகள் கொண்ட பங்குனி மாதத்தில் நவ கிரகங்கள் சஞ்சாரத்தின் படி சிம்மம் முதல் கன்னி வரை உள்ள ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.

சிம்மம்
இந்த மாதத்தில் சூரியன் எட்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். செவ்வாய் ஐந்தாம் வீட்டில் இருந்து ஆறில் சனியோடு சேர்கிறார். கூடவே குருவும் அதிசாரமாக ஆறாம் வீட்டிற்கு வருகிறார்.

லாப ஸ்தானத்தில் ராகு, ஐந்தாம் வீட்டில் கேது, சுக்கிரன் ஒன்பது, பத்து வீடுகளிலும் சஞ்சரிக்க புதன் ஏழாம் வீட்டில் இருந்து எட்டாம் வீட்டிற்கு நகர்வது சிறப்பு. தேவையற்ற விசயங்களில் தலையிட வேண்டாம்.

நல்லா தூங்குங்க இல்லாட்டி கண்ல கட்டிகள் வரலாம். மாணவர்கள் அடிக்கடி ஓய்வு எடுத்துக்கொண்டு குளிங்க. நல்லா சரியான சாப்பிடுங்க. உணவுக்கட்டுப்பாடு வேண்டும். உடம்பை உஷ்ணம் இல்லாமல் பார்த்துக்கலாம்.

சூரியன் பலம் பெரும் மாதம் வெற்றிகள் கிடைக்கும் மாதம். அதே நேரம் எட்டில் மறைவதால் வண்டி வாகனங்களில் போகும் போது கவனமாக இருங்க. சுக்கிரன் உங்க ராசிக்கு ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் இருந்து நிறைய நன்மைகளை கொடுக்கிறார். 15ஆம் தேதிக்கு மேல் பத்தாம் வீட்டிற்கு நகர்ந்து மாளவியா யோகம் பெற்று அமரப்போகிறார்.

உங்க செல்வம் செல்வாக்கு கூடும். பத்துக்கு உடையவன் பத்தாம் வீட்டில் சஞ்சரிப்பதால் நல்ல வேலை நீங்க விரும்பிய இடத்தில் கிடைக்கும். அதிர்ஷ்டங்கள் நிறைந்த மாதம் அற்புதங்களை தரப்போகிறது. செவ்வாய் ஆறாம் வீட்டிலும் புதன் எட்டாம் வீட்டிலும் இருந்தாலும் நிறைய பணவரவு வரும். எதிரிகள் தொல்லைகள் நீங்கும்.

சனி ஆறாம் வீட்டில் இருப்பதால் திருமண முயற்சிகள் தடைகள் தாண்டி முடியும். சில குழப்பங்கள் அவ்வப்போது இருக்கும். மனதில் தளர்ச்சி அடையக்கூடாது உங்களுக்கு சுக்கிரன் நிறைய நன்மைகளை செய்வார்.

அதிசார குருவின் பார்வை உங்க ராசிக்கு விரைய ஸ்தானம் குடும்ப ஸ்தானங்களின் மீது விழுவதால் பணவரவு கிடைக்கும். ஆறாம் வீட்டில் மூன்று கிரகங்கள் சேருவது பிரச்சினைதான் தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். வெளிநாடு யோகம் வரும். சனி செவ்வாய் கூட்டணி ஆறாம் வீட்டில் இருப்பதால் வண்டி வாகனங்களில் போகும் போது கவனமாக இருங்க.

யாருடனும் தேவையில்ல வம்பு வழக்குகள் வேண்டாம் உங்களுக்குத்தான் அது பிரச்சினையாக முடியும். எந்த முடிவையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவு பண்ணுங்க. பிராணயாமம் பயிற்சி எடுங்க. சூரிய நமஸ்காரம் செய்யுங்க நீங்க நினைத்ததை சாதிப்பீங்க.

கன்னி
கன்னி ராசிக்காரர்களே உங்களுக்கு இந்த மாதம் ஏழாம் வீட்டில் சூரியன் சஞ்சரிக்கிறார் சூரியன் பார்வை உங்க ராசி மீது நேரடியாக விழுகிறது.

உங்க ராசிநாதன் புதன் மாத முற்பகுதியில் ஆறாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். பிற்பகுதியில் ஏழாம் வீட்டிற்கு சென்று நீசம் பெறுகிறார். நீசம் பெற்ற புதனின் பார்வை உங்க ராசியின் மீது விழுகிறது. பிசினஸ் வளர்ச்சியடையும் பணவரவு நன்றாக இருக்கும். நண்பர்கள் உறவினர்களின் உதவி கிடைக்கும் என்றாலும் நீங்க செய்யும் வேலையில் கவனமாக இருங்க. செவ்வாய், குரு, கேது உங்க ராசிக்கு நான்காம் வீட்டில் சஞ்சரிக்கின்றனர்.

ராகு பத்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். ஐந்தாம் வீட்டில் சனி சஞ்சரிக்கிறார். கிரகங்கள் மாத பிற்பகுதியில் ஐந்தாம் வீட்டில் இணைகின்றன. குழப்பம் அதிகமாகும்.

சுக்கிரன் மாத முற்பகுதியில் எட்டாம் வீட்டில் இருப்பதால் பணம் விசயத்தில் கவனமாக இருங்க. மாத பிற்பகுதியில் சுக்கிரன் ஆட்சி பெற்று அமர்வது சிறப்பு. பணவரவு அதிகமாகும். சனி, செவ்வாய், அதிசார குருவின் சேர்க்கை உங்களுக்கு நன்மையை கொடுக்கும் என்றாலும் பிள்ளைகள் மீது கவனமாக இருங்க. உங்க ராசிக்கு லாப ஸ்தானத்தின் மீது விழுவதால் தொழில் வளர்ச்சியாகும். சிலருக்கு காதல் வெற்றி பெறும்.

மாணவர்கள் தேர்வில் கவனம் செலுத்துங்க. ஆசிரியர்கள், பெற்றோர்கள் சொல்வதை கேளுங்க. உயர் கல்வி தொடர்பாக அவசரப்பட்டு முடிவு எடுக்காதீங்க. திருமண பேச்சுவார்த்தைகள் இழுபறியாக இருக்கும். இந்த மாதம் நீங்க புதன்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு போய் துளசி மாலை போடுங்க நல்லது நடக்கும்.

துலாம்
சுக்கிரனை ராசி நாதனாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே, சூரியன் உங்க ராசிக்கு ஆறாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். ராசிநாதன் சுக்கிரன் ஏழாம் வீட்டிலும் மாத பிற்பகுதியில் எட்டாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்கிறார். புதன் உங்க ராசிக்கு ஐந்தாம் வீட்டிலும் பின்னர் ஆறாம் வீட்டிற்கும் நகர்கிறார்.

செவ்வாய் சனி,அதிசார குருவின் சேர்க்கை நான்காம் வீட்டில் நிகழ்கிறது. ராகு ஒன்பதாம் வீட்டிலும் கேது மூன்றாம் வீட்டிலும் சஞ்சரிக்கின்றனர்.

மாத முற்பகுதியில் ஏழாம் வீட்டில் இருந்து சுக்கிரன் பார்வை கிடைப்பது சிறப்பு. பணவரும் வாய்ப்பு அதிகமாகும். எட்டில் சுக்கிரன் மறைவதால் பணம் வருவதில் தடைகள் ஏற்படும்.

சூரியன் உங்க ராசிக்கு லாபாதிபதி ஆறாம் வீட்டில் மறைகிறார். இது உங்களுக்கு பாதகம்தான். சனி அர்த்தாஷ்டம சனியாக இருக்கும் போது கூடவே செவ்வாய், குருவும் இணைந்திருப்பதால் வீடு வாகனம் மாற்றலாம். இடம்மாற்றம் ஏற்படும். சசமகா யோகம் பெற்றுள்ள சனியோடு செவ்வாய் இணைவதால் ராஜயோகம் கிடைக்கும் மாத பிற்பகுதியில் அதிசாரம் பெற்ற குரு செவ்வாய் சனியோடு நான்காம் வீட்டில் இணைகிறார். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். அம்மா வழி உறவினர்களிடையே நீங்கள் கவனமாக பேசுங்க.

சொந்த பந்தங்களுக்கு இடையே பிரச்சினைகள் வரலாம் கவனம் தேவை. சிலருக்கு வேலை மாற்றம் ஏற்படும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். எதையும் ரொம்ப முயற்சி செய்துதான் ஜெயிக்க வேண்டியிருக்கும். இந்த மாதம் திருமணப் பேச்சுவார்த்தைகள் வேண்டாம். தடைகள் ஏற்படும் கவனமாக இருங்க.

மாணவர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவு செய்யுங்க. உயர்கல்வி படிக்கப் போகிறவர்கள் எதையும் எடுத்தேன் கவிழ்தேன் என்று முடிவெடுக்க வேண்டாம். பெரியவர்களின் ஆலோசனையை கட்டாயம் கேளுங்க. கொரோனா அச்சம் வேற இருக்கு வெளிநாடு செல்ல நினைக்கிறவங்க கொஞ்சம் யோசிங்க. வாய்ப்பு கிடைக்கும் இருந்தாலும் வெளிநாடு செல்வதற்கு வேலைமாற்றம் எதுவும் வேண்டாம். உயிர் ரொம்ப முக்கியம்தானே.

அறிமுகம் இல்லாதவர்கள் மூலம் உங்களுக்கு நல்ல தகவல் தேடி வரும். உங்க தனாதிபதி உச்சம் பெற்று இரண்டாம் வீட்டில் பார்வை விழுவதால் பணவரவு அதிகமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. பயணங்களில் கவனமாக இருங்க. வண்டி வாகனங்களில் போகும் போது நிதானமாக இருங்க. வயதானவர்கள் கவனமாக இருங்க. உங்களின் தன்னம்பிக்கை அதிகமாகும். வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வணங்குங்க பாதிப்புகள் நீங்கி நன்மைகள் அதிகம் நடைபெறும்.

விருச்சிகம்
செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிகம் ராசிக்காரர்களே, இந்த மாதம் உங்களுக்கு கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் சூரியன் ஐந்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார்.

புதன் நான்காம் வீடு, சுக்கிரன் ஆறாம் வீடு, சனி மூன்றாம் வீடு, செவ்வாய் கேது, குரு இரண்டாம் வீடு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றனர். மறைந்திருக்கும் சுக்கிரன் ஏழாம் வீட்டிற்கு சென்று ஆட்சி பெற்று அமர்ந்து உங்க ராசியை பார்க்கிறார்.

இது மாளவியா யோகம் பெற்ற அமைப்பு. நிறைய பணவரவு அதிகமாகும். சுபமான பார்வை சந்தோஷத்தை கொடுக்கும். உங்க மன அமைதி அற்புதமாக கிடைக்கும்.

உங்க வாழ்க்கை துணையின் மூலம் உதவி கிடைக்கும், குடும்பத்தில் பிரச்சினைகள் இருந்தால் தீரும். திருமண பேச்சுவார்த்தைகள் சுபமாக முடியும். ஆரோக்கியமும் அற்புதமாக இருக்கும்.

மூன்றாம் வீட்டில் சனி, செவ்வாய், அதிசார குரு இணைவதால் உங்க தைரியம் தன்னம்பிக்கை அதிகமாகும். இளைய சகோதரர்கள் வழியில் உதவி கிடைக்கும். அதே நேரத்தில் தனாதிபதி குரு அதிசாரமாக மூன்றாம் வீட்டில் மறைவது சிறப்பல்ல. பணம் கொஞ்சம் விரைய செலவாகும். உங்க கடன்களை அடைக்க நேரம் வந்து விட்டது.

மாணவர்களுக்கு ரொம்ப நல்ல மாதம். பிசினஸ் செய்பவர்களுக்கு ரொம்ப நல்ல மாதம். மாத தொடக்கத்தில் சுக்கிரன் ஆறாம் வீட்டில் இருப்பதால் கணவன் மனைவி உறவில் விட்டுக்கொடுத்து போங்க. தேவையில்லாத வீண் விவாதங்களை தவிர்த்து விடுங்கள். வம்பு வழக்குகளை தவிர்த்து விடுங்கள். உங்க ராசிநாதன் செவ்வாய் இரண்டாம் வீட்டில் இருந்து மூன்றாம் வீட்டிற்கு சென்று உச்சம் பெற்று அமரப்போகிறார். மூன்றாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்துள்ள சனியோடு செவ்வாய் உச்சம் பெற்று இணைகிறார். சகோதர சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும். பணவரவு அதிகமாகும்.

புதிய தொழில் தொடங்கலாம். சிலருக்கு நல்ல வேலைகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவிகள் கிடைக்கும். மகரம் ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாயின் பார்வை ஏழாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்து உங்க ராசியை பார்க்கும் சுக்கிரன் மீதும் விழுவதால் காதல் மலரும் என்றாலும் காதல் உறவில் கவனம் தேவை.

வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் போது முன்யோசனை அவசியம். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்க. மாத பிற்பகுதியில் கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். அன்பு அதிகமாகும். இந்த மாதம் நீங்க செவ்வாய்கிழமைகளில் முருகப்பெருமானை வணங்குங்கள் நன்மைகள் அதிகம் நடைபெறும். சந்தோஷம் கூடும்.