தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இளம்நடிகையிடம் எல்லைமீறிய பிரபலம்

தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகள் மக்களிடத்தில் பெருமளவில் ஈர்த்து வருகிறது. அதில் மிகப்பெரிய டி ஆர் பியை அதிகரிக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்தியில் 13ஆவது பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றி நடைபோட்டாலும் தற்போது தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் ஒளிப்பரப்பாகியுள்ளது.

சமீபத்தில் மலையாள மொழியில் நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் 2 சீசன் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது 60 நாட்களுக்கு மேல் சென்று கொண்டிருக்கும் நிலையில் கடந்த வாரம் மலையாள சினிமாவை அதிரவைத்த சம்பவம் நடந்துள்ளது.

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேராசிரியர் ரஜித் குமார் கடந்த 2013ல் இருந்துதான் பிரபலமானார். நிகழ்ச்சியில் பல சர்ச்சையாக பேசியும், பெண்கள் ஜீன்ஸ் அணிவதால் தான் திருநங்கைகளாக குழந்தைகளை பெற்றெடுக்கின்றனர். இவ்வாறு பெண்களை குறித்து பல சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி வந்துள்ளார்.

இந்நிலையில் அவர் சக போட்டியாளரான மாடல்பெண் ரேஷ்மாவை பள்ளி பருவம் என்ற டாஸ்கில் அவரது கண்ணில் மிளக்காய் பொடியினை திணித்துள்ளார். இதனால் ரேஷ்மாவின் கண்ணில் சில பிரச்சனைகள் ஏற்பட்டது.

இந்த செயலால் ரஜித் குமார் நேரடியாக நடிகர் மோகன்லாலால் வெளியேற்றப்பட்டார். சக போட்டியாளரை மனதளவிலும், உடலளவிலும் காயப்படுத்தி விதிமீறியதால் போட்டியில் இருந்து நீக்கியுள்ளனர். இப்படி செய்தது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.