முன்னணி நடிகரின் படத்தில் இருந்து விலக இதுதான் காரணம்… நடிகை த்ரிஷா…..

தமிழ் சினிமாவில் சிறிய படங்களில் கமிட்டாகி அதன்பின் நடிகர் விஜய்யின் கில்லி படத்தின் மூலம் பல படங்களில் கமிட்டாகி நடித்தவர் நடிகை த்ரிஷா. தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக கனவு கன்னியாக வலம் வந்தவரும் த்ரிஷா தான். சமீபத்தில் வெளியான 96 படத்தில் நடித்து மிகச்சிறந்த நடிப்பை கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.

தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் த்ரிஷா தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் படத்தில் கமிட்டாகி தற்போது சில காரணங்களால் விலகியுள்ளார். இப்படத்தில் பல சர்ச்சைகள் வெளி வந்த நிலையில் கதையின் கருத்தாக படத்தின் பெயரை நடிகர் சிரஞ்சீவி உளறிவிட்டார். அதற்காக அவர் இயக்குநரிடம் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.

இதை தொடர்ந்து இப்படத்தில் இருந்து தான் எதற்காக விலகினேன் என்று நடிகை த்ரிஷா பதிலளித்துள்ளார். சில நேரங்களில் நாம் நினைத்து செல்வது ஒன்று, பின் நடப்பது வேறொன்றாக மாறிவிடுகிறது. சில கருத்து வேறுபாடுகளால் படக்குழுவினருடன் இணையமுடியாத சூழ்நிலையில் படத்திலிருந்து விலகினேன் என்று கூறியுள்ளார். இதனால் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.