படத்திற்காக தம் அடிக்கும் பிரபல நடிகை……

தமிழில் சிறு பிள்ளைகளை வைத்து படங்கள் எடுப்பது இயக்குநர்களுக்கும் பெரிய சவாலாக அமையும். அந்தவகையில் சிறுவர்கள் எப்படி இருக்க வேண்டும், ஆசிரியர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் சாட்டை படத்தினை கொண்டு கூறியவர் இயக்குநர் சமுத்திரகனி. இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை மஹிமா நம்பியார்.

இவர் சாட்டை படத்தின் 12 வகுப்பு மாணவியாக நடித்து இப்படத்தின் மூலம் சினிமாவில் நல்ல வரவேற்ப்பை பெற்றார். அதன் பின் அடுத்தடுத்த படங்களான மொசக்குட்டி, குற்றம் 23, கொடிவீரன் போன்ற படங்களில் நடித்தார். மேலும் பல படங்களில் கமிட்டாகி நடித்துள்ளார். சமீபத்தில் நடிகர் விக்ரம் பிரபு நடித்த அசுரகுரு படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இப்படம் பல பிரச்சனைகளால் 2018ல் வெளியாக இருந்து தற்போது தான் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நடிகை மஹிமா இப்படத்தில் டிடக்டிவ் ஏஜெண்டாக நடித்திருந்தார். கதாபாத்திரத்திற்கேற்ப ஆடையை தேர்வு செய்து போல்ட்டாக நடித்திருப்பார்.

படத்தில் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்க யோசிக்கும் நடிகைகள் மத்தியில் படத்தின் கதைக்காக நடிகை மஹிமா பல காட்சிகளில் புகைப்பிடித்துள்ளார். அந்த காட்சியின் புகைப்படங்கள் வைரலாகி ரசிகர்களிடையே கிண்டலுக்கு ஆளாகியுள்ளார் நடிகை.