நிலக்கடலை குலோப் ஜாமூன்
தேவையான பொருட்கள் :
நிலக்கடலை – ஒன்றரை கப்
முந்திரி பருப்பு – 15
பால் – கால் லிட்டர்
மைதா – ஒன்றரை கப்
சர்க்கரை – கால் கிலோ
பேக்கிங் பவுடர் – 1 சிட்டிகை
ஏலக்காய் – 3
கேசரி பவுடர் – 1 சிட்டிகை
எண்ணெய் – தேவைக்கேற்ப.
செய்முறை :
நிலக்கடலையை வறுத்து தோல் நீக்கவும். பின் நிலக்கடலை மற்றும் முந்திரி இரண்டையும் பாலில் ஊற வைத்து கொள்ளவும். பிறகு ஊறிய பருப்புகளை எடுத்து விழுதாக அரைக்கவும்.
அரைக்கும் போது தண்ணீர், பால் போன்று எதுவும் சேர்க்க கூடாது. அரைத்த விழுதுடன் மைதா, பேக்கிங் சோடா, ஏலப்பொடி, கேசரி பவுடர் சேர்த்து உருண்டை பிடிக்கும் பதத்திற்கு பிசையவும். இறுகலாக பிசைந்தால் எண்ணெயில் போடும் போது உடைந்து விடும்.
மென்மையான பதத்தில் பிசையவும். பிசைந்த மாவை சிறு சிறு உருண்டையாக பிடிக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய விடவும். காய்ந்ததும் உருண்டைகளை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர், ஏலக்காய் தட்டி போட்டு ஜீரா செய்யவும். பொரித்த உருண்டைகளை ஜீராவில் போட்டு ஊறிய பிறகு எடுத்து பரிமாறவும். சுவையான நிலக்கடலை குலோப் ஜாமூன் ரெடி.!