நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவை தன் பக்கம் வைத்திருப்பவர் என்றால் அது சரியாக பொருந்தும் என்றே சொல்லலாம். அண்மையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் விஜய் சேதுபதியுடன் நானும் ரவுடி தான் கூட்டணியில் இணைந்தார்.
தற்போது அவர் அவள் என்னும் திகில் படத்தை இயக்கிய மிலிந்த் இயக்கத்தில் நெற்றிக்கண் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நயன்தாரா கண் பார்வையற்றவராக நடிக்கிறார். இது பிளைண்டு என்ற கொரியன் படத்தின் ரீமேக் ஆகும்.
இப்படத்தில் படப்பிடிப்புகள் 80 சதவீதம் முடிந்துவிட்டன. கொரோனா காரணமாக தற்போது படப்பிடிப்புகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாம்.
இறுதி கட்டத்தை படிப்புகள் எட்டி வரும் நிலையில் நடிகர் அஜ்மல் படத்தில் இணைந்துள்ளார். அஞ்சாதே, கோ, இரவுக்கு ஆயிரம் கண்கள் ஆகிய படங்கள் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்தவர் அஜ்மல் என்பது குறிப்பிடத்தக்கது.