விஜய்யின் அடுத்தப்படம் 99% இந்த இயக்குனர் தானாம்

தளபதி விஜய் இன்று இந்தியாவே தெரியும் ஒரு முன்னணி நடிகர். ஆனால், இவர் இந்த உயரத்தை அடைய பல கஷ்டங்களை கடந்து தான் வந்துள்ளார்.

அந்த வகையில் விஜய் நடிப்பில் கடைசியாக வந்த பிகில் பிரமாண்ட வெற்றியை பெற, தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படம் ஏப்ரல் விருந்தாக திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது, இந்நிலையில் விஜய் இதன் பிறகு யார் இயக்கத்தில் நடிப்பார் என்பது தான் எல்லோரின் எதிர்ப்பார்ப்பும்.

அந்த வகையில் பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தன் தளம் ஒன்றில் விஜய்யின் அடுத்தப்பட இயக்குனர் முருகதாஸ் தான் என்று கூறியுள்ளார்.

அதோடு முருகதாஸிற்கு சன் டிவி பிக்சர்ஸ் ஒரு சில கண்டிஷன் போட்டுள்ளார்களாம், ஆம், சன் பிக்சர்ஸ் தான் இப்படத்தை தயாரிக்கவுள்ளது.

முருகதாஸ் அந்த கண்டிஷனுக்கு இறங்கி வந்தாலோ, அல்லது சன் பிக்சர்ஸ் விட்டுக்கொடுத்தாலோ இந்த படம் 99% கூட்டணி உறுதியாகிவிடுமாம்.

ஏனெனில், முருகதாஸ் சொன்ன கதை விஜய்க்கு மிகவும் பிடித்துள்ளதாம், எப்போது வேண்டுமானாலும் இதன் அறிவிப்பு வரலாம் என கூறப்படுகின்றது.