கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் நிலையில், முன்னெச்சரிக்கையாக அடுத்த 7 நாட்களுக்கு தனது வீட்டில் முழுமையாக தனிமைப்படுத்தப்படுவதாக பெங்காலி திரைப்பட நடிகையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யுமான மிமி சக்ரபர்த்தி தெரிவித்துள்ளார்.
மிமி சக்ரபர்த்தி பாஜி என்ற படத்தின்படப்பிடிப்பிற்காக பிரிட்டன் சென்றிருந்தர். லண்டனிலிருந்து கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த மிமி, வெப்ப பரிசோதனை மற்றும் கொரோனா வைரஸ் தொடர்பான பிற பரிசோதனைகளை செய்துகொண்டார்.
இந்த பரிசோதனைகளுக்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய மிமி, “நான் இங்கிலாந்திலிருந்து துபாய் வழியாக கொல்கத்தா வந்துள்ளேன், எனவே அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. என்னை எனது வீட்டில் இருப்பவ்ர்கள் யாரும் சந்திக்க வேண்டாம் என எனது தாய் தந்தையிடம் கேட்டுக்கொண்டேன். கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க இந்திய அரசு கூறும் வழிமுறைகளை அனைத்து மக்களும் பின்பற்றவேண்டும் என கேட்டுக்கொண்டார்.