தோழியால் ஏற்பட்ட பிரச்சனை.. விபரீதத்திற்கு உல்லாசமாக இருந்து, வாழ்க்கையை இழந்த பெண்…..

பெண்கள் எப்படிப்பட்ட துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள் என்பது அவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாதவரை யாருக்கும் புரியாத புதிராகவே பெண்கள் இருக்கின்றனர். இதனால் ஏற்படும் பிரச்சனைகளுக்கும், நன்மைகளுக்கும் பெண்ணின் துணையாக இருக்கும் கணவரும் மூலகாரணமாக இருக்கிறார். சுற்றுப்புற சூழ்நிலையும் அமைகிறது.

கல்லூரியில் பயின்று வந்த இளம்பெண்ணிற்கு வயது 21 இருக்கும் போது அவருக்கு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இவரது கணவர் தொழிலதிபர் என்பதால் எந்த நேரமும் பரபரப்புடன் பணிகளை கவனித்து வருவார். இவர் என்னதான் பணிகளை பரபரப்புடன் கவனித்தாலும், திருமணம் முடிந்த இரண்டு மாதம் வரை மனைவியை தினமும் கொஞ்சி உல்லாசமாக இருந்துள்ளார்.

மூன்றாவது மாதத்தின் துவக்கத்தில் மனைவி கசந்து போகவே, தனது நிறுவனத்திற்கு விளம்பரத்தில் வரும் பெண்களை வைத்து நட்சத்திர விடுதி மற்றும் வெளிநாடு என்று சுற்ற துவங்கியுள்ளார். இந்த விஷயத்தை அறிந்த பெண்மணி கணவரிடம் சண்டையிடவே, எனக்கு பல டென்ஷன் இருக்கிறது. இதனைகுறைக்க இப்படி சுற்றுவேன். இது சாதாரணமான ஒன்று என்று தெரிவித்து மழுப்பியுள்ளார்.

இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் தானும் மற்றொரு ஆணுடன் தாம்பத்தியம் வைத்துகொள்ளவா? என்று கேட்கவே, பல இல்லத்தில் நடைபெறுகிறது.. எனக்கு பிரச்சனை இல்லை என்று கூறி இயல்பாக தெரிவித்து கணவர் சென்றுள்ளார். தனக்கான அன்பு மறுக்கப்பட்டு, கணவனுடன் நெருக்கம் மறுக்கப்பட்டுள்ளது. இதனால் திருமணம் முடிந்தும் இன்பம், நிம்மதி இல்லாத வாழ்க்கையை பெண் வாழ்ந்து வரவே, இவரது தோழி மூலமாக பல விஷயம் நடந்துள்ளது.

இவரது தோழி துவக்கத்தில் ஆறுதல் கூறி சில வலைத்தளத்தை அறிமுகம் செய்து வைத்துள்ளார். இதன்படி பணம்பெற்று கலவி வைத்துக்கொள்ளும் ஆண்களின் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதன்படி இவருக்கு ஒரு நபரின் பழக்கம் கிடைக்கவே, கணவனால் கிடைக்காத அன்பும், தாம்பத்தியமும் கிடைத்துள்ளது. இந்த நிலையில், தொடர்பு கிடைத்த ஆண் தனது அலைபேசியை காண்பித்து விடியோவை பார்க்க கூறியுள்ளான்.

இதில் பெரும் அதிர்ச்சியாக இருவரும் தாம்பத்தியம் மேற்கொண்ட காட்சிகள் இருந்துள்ளது. தனக்கு பணம் வேண்டும் என்றும், பணம் கொடுக்காவிடில் சமூக வலைத்தளத்தில் விடியோவை பதிவு செய்து மானத்தை வாங்கிவிடுவேன் என்று மிரட்டவே, வழியில்லாமல் விழிபிதுங்கிய பெண்மணி கணவனிடம் விஷயத்தை தெரிவித்து பிரச்சனையை சரி செய்துள்ளார்.

இந்த சம்பவத்தில், தோழியால் அறிமுகமான நபரை ஆண் பாலியல் தொழிலாளி என்று கூறுவார்கள். இது அமெரிக்காவில் பிரபல சேவையாக இருந்து வந்தாலும், நமது நாட்டில் பல கொள்ளை, கொலைகளுக்கு வித்திடுகிறது. இவர்களை ஆங்கிலத்தில் “ஜிகோலோ (Gigolo)” என்று அழைப்பார்கள். இவர்களின் பணியாக பெண்களின் கணவர் போல இருவரும் சந்திக்கும் நேரத்தில் அளவுகடந்த பாசம், தாம்பத்திய இன்பம் கொடுக்க வேண்டும். இவர்களுக்கு பெண்கள் பணம் கொடுப்பார்கள்.

பொதுவாக பெண்கள் இவ்வாறாக முடிவு எடுக்க அல்லது மற்றொரு ஆணுடன் உறவு வைத்துக்கொள்ள உளவியல் ரீதியாக ஒவ்வொரு பெண்களுக்கும் ஒவ்வொரு காரணம் உள்ளது. பொதுவான காரணமாக ஆணை போல எல்லா நடவடிக்கையிலும் இருக்க ஆசைப்படுதல்.. நாமும் எதற்காக நமக்கு பிடித்த நபருடன் எல்லாம் தாம்பத்தியம் வைத்துக்கொள்ள கூடாது என்ற எண்ணம் மற்றும் கணவனின் இயலாமை, கணவனின் கையாலாகாததனம் (மனைவியை விடுத்து பிற பெண்களை கொஞ்சுவது)..

ஆணோ அல்லது பெண்ணோ இவ்வாறான முடிவை எடுத்து தாம்பத்தியம் அனுபவிக்க துவங்கினால் ஏற்படும் பாதக விளைவாக பாலியல் நோய்கள், தேவையில்லாத கர்ப்பம், விடியோக்கள் மற்றும் புகைப்படத்தை வைத்து மிரட்டுவது, ஒருநாள் உல்லாசம் நெடுநாள் உறவாக மாறும் வாய்ப்பு, தாம்பத்திய வாழ்க்கை பிரச்சனை மற்றும் யாருக்கும் தெரிந்தால் அவப்பெயர் என்று பல பிரச்சனைகள் காத்திருக்கும்.

இதனை அறிந்து ஆண் முட்டாள்தனமாக சேற்றில் கால் வைத்தாலும், பெண் ஏன் இப்படி மாறிவிட்டார் என்று கேட்டால், அவர்களுக்கும் உணர்வுகள், உணர்ச்சிகள், ஏக்கங்கள், கோபங்கள், தாபங்கள், மனதில் ஆசைகள் உள்ளது. இதனை கணவனாக இருக்கும் நபர் செய்ய தவறும் பட்சத்தில் அல்லது மனைவியின் மீது பாசத்தை காட்டாமல் இருந்தால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இது போன்ற பிரச்சனைகளுக்கு முடிந்தளவு தம்பதிகள் மருத்துவரிடம் ஆலோசனை அல்லது தங்களுக்குள்ளான பிரச்சனையை மனம்விட்டு பேசி சரி செய்துகொள்வது நல்லது.