ஆதித்திய வர்மா படத்தில் மீரா என்னும் கதாபாத்திரத்தில்நடித்தவர் பனித்தா சந்து. இவர் ஹிந்தியில் ‘அக்டோபர்’ என்னும் திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்து திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார்.
இவர் 2019-ம் ஆண்டு வெளிவந்த ஆதித்திய வர்மா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். மேலும் இவர் சிறு வயதிலிருந்து தொலைக்காட்சி தொடர்களின் குழந்தை கதாபாத்திரங்களில் நடித்து வந்துள்ளார்.
அர்ஜுன் ரெட்டி என்ற தெலுகு காதல் திரைப்படம் தமிழில் ஆதித்திய வர்மா என்று எடுக்கப்பட்டது. இதன் மூலம் பணித்தா சந்துவுக்கு தமிழ் சினிமாவில் ரசிகர்கள் கூட்டம் குவிந்தது. இவர் எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பார். அவரது அழகிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றார்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் உலகை ஆட்கொள்ளும் நிலையில் இருமல் குறித்து தலைப்பு கொடுத்து தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இருக்கின்றார். அட அமைதியான பொண்ணு மீராவா இது என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.