தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் கெளதமி. ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த இவர் சந்தீப் பாட்டியா என்பவருடன் திருமணம் செய்து விவாகரத்தும் பெற்று கொண்டார்.
கமல்ஹாசனுடன் அபூர்வ சகோதரர்கள் உள்ளிட்ட பல படங்களில் ஜோடியாக நடித்தவர் கவுதமி. பத்து வருடங்களுக்கும் மேலாக துணைவியாகவும் இருந்தார்.
மேலும், கெளதமிக்கு சுபா லக்ஷ்மி என்ற மகள் ஒருவர் இருக்கிறார். தற்போது நடிகை கெளதமி தன்னுடைய மகளுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. விரைவில் சுபாவும் சினிமாவுக்கு நடிக்க வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.