பிரபல தொலைக்காட்சி சீரியலில் இருந்து விலகினாரா நடிகை நீலிமா….

தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் வில்லையாக நடித்தாலே பெரியளவில் பிரபலமாகிவிடலாம். அந்த வகையில் தேவர் மகன், பாண்டவர் பூமி, ஆல்பம், விரும்புகிறேன் ஆகிய படங்கள் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை நீலிமா ராணி.

அதன்பின் அடுத்தடுத்த படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றார். அக்கா அண்ணி கதாபாத்திரங்களுக்கு மிகவும் பொருந்தும் வகையில் வெள்ளித்திரையிலும் நடித்து வந்தார்.

தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்த நீலிமா மெட்டி ஒலி என்ற சீரியலில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்துள்ளார். அதன்பின் பல தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பெண்மணிகளை கவர்ந்து வந்தார். தற்போது பிரபல தொலைக்காட்சி சீரியலான அரண்மனைக்கிளியில் கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

கடந்த இரு வருடங்களாக அந்த சீரியலில் நடித்து வந்த நீலிமா தற்போது ~விலகிவிட்டேன் என்றும் துர்கா நீ போய் வா எனக்கூறி நீங்கள் தான் என் பலம் எனக்காக வேண்டிகொள்ளுங்கள்~ என்று கூறி அவரது சமுகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதை கண்ட ரசிகர்கள் ஷாக்காகி கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.

சீரியலில் இருந்து விலகுவதற்கு என்ன காரணம் என்று அவர் எங்கும் குறிப்பிடாமல் இருக்கிறார். தொலைக்காட்சி நிறுவனத்தினால் இந்த முடிவா? என்று சிலர் கேள்வி கேட்டு வருகிறார்கள்.