சினிமா நடிகைகளுக்கு இணையாக தற்போது தொலைக்காட்சி பிரபலங்களும் மக்கள் மனதில் பெரிய இடத்தினை பெற்று வருகிறார்கள். அதிலும் சினிமா படங்களுக்கு நிகராக எடுக்கப்படும் சீரியல் நடிகர், நடிகைகள் பெரியளவில் நட்சத்திரங்களாக மாறிவிடுகிறார்கள்.
அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வெற்றிநடை போட்ட சீரியல் தான் ராஜா ராணி. இந்த சீரியலில் நடிகர் சஞ்சீவ், நடிகை ஆல்யா மானாசா ஹீரோ ஹீரோயினாக நடித்திருப்பார்கள். இவர்களின் கதாபாத்திரங்களில் நல்ல வரவேற்ப்பை பெற்று அனைவரையும் கவர்ந்தது.
இவரும் சீரியலில் நடிப்பதை அவர்களது ரசிகர்கள் நிஜத்திலேயே திருமணம் செய்து கொண்டால் நல்ல கெமிஸ்டி இருக்கும் என்று கூறி வந்தனர். அதேபோல் சஞ்சீவும் மானசாவும் எங்கு சென்றாலும் ஒன்றாக ஜோடியாக சென்று வருவதுமாக இருந்து, பின் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இவர்களது திருமண வரவேற்ப்பு நிகழ்வு பிரமாண்டமாக நடைபெற்றது.
தற்போது கர்ப்பமாக இருக்கும் மானசாவிற்கு சமீபத்தில் தான் தொலைக்காட்சி நிறுவனம் வலைக்காப்பு நிகழ்ச்சியும் நடத்தியது. இந்நிலையில் கர்ப்பமாக இருக்கும் மானசா விளம்பர படத்தில் நடித்து முடித்துள்ளார். அதனை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டும் இருந்தார்.
இதை கண்ட ரசிகர்கள் கர்ப்பமாக இருக்கும் போதும் அதுவும் கொரானா வைரஸ் பரவி வரும் சூழலில் இந்த விளம்பர படம் தேவையா என்று கோபத்தில் திட்டி வருகிறார்கள்.
அதற்கு மானசா தகுந்த பாதுகாப்போடு தான் விளம்பரத்தில் நடித்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
View this post on Instagram
A small making video by Papu @sanjeev_karthick on the sets of Johnson’s baby adshoot ??????