தந்தையை பக்கத்தில் வைத்துகொண்டே நடிகை செய்த செயல்..

தமிழ் சினிமாவில் காமெடி படங்கள் அதிகமாக வந்தாலும் அவ்வளவாக சிரிப்பேற்றும் படங்கள் குறைந்து வருகிறது. அதில் சக்கபோடு போட்ட படம் தான் ஜீவா, சந்தானம் நடித்த சிவா மனசுல சக்தி. இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை அனுயா பாக்வத். துபாயில் பிறந்து சினிமாவில் ஆர்வம் காட்டி இந்தியாவிற்கு வந்து படங்களில் நடித்து வந்தார்.

அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகுவார் என்று நினைத்திருந்த அவருக்கு திரைத்துறையில் படவாய்ப்புகள் கிடைக்காமல் ஆளே தடம் தெரியாமல் காணாமல் போனார். அதன்பின் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு ரீ எண்ட்ரி கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தார்.

அதன்பின் தற்போது சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் அனுயா சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமீபத்தில் அவருடைய தந்தையுடன் கடற்கரையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.

அதில் ஒரு ஓட்டலில் இருந்து கையில் பீர் பாட்டிலும் இருக்கும் புகைப்படத்தை தன் தந்தையுடன் சேர்ந்து குடிப்பது போல்தான் அப்புகைப்படம். தற்போது அப்புகைப்படத்தால் ரசிகர்கள் அவரை திட்டித்தீர்த்து வருகிறார்கள்.