ஆபாச கமெண்ட்டுகளால் டென்ஷன் ஆன ரகுல் ப்ரீத் சிங்.. பதிலுக்கு பதில்…

தென்னிந்திய திரையுலகில் பிரபல முன்னணி கதாநாயகியாக வளம் வரும் நடிகை ராகுல் ப்ரீத் சிங். இவர் இணையத்தளத்தில் உள்ள பக்கத்தில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார்.

மேலும், இவர் பதிவு செய்யும் புகைப்படத்திற்கு அதிகளவு விமர்சனமும் எழுந்து வருகிறது. ஆபாச கருத்துக்களும் கமெண்ட்டுகளில் வசைபாடபட்டு வருகிறது. இந்த விசயத்திற்கு கருத்து தெரிவித்துள்ள ராகுல் ப்ரீத் கூறியிருப்பதாவது,

சிலர் நடிகைகளை கேவலமாக நினைக்கின்றனர். திரைத்துறையில் இருப்பதால் நம்மால் அவரை என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் என்று எதிர்பார்க்கின்றனர். இதனால் சமூக வலைத்தளத்தில் ஆபாசமாக பேசி வருகின்றனர்.

இது மனதளவில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்களை இன்றளவும் போதை பொருளாக சமூகம் நோக்குகிறது. இந்த நிலைமை மாற வேண்டும். எனது உடை குறித்து அவதூறாக பேசினார், எனக்கு கோபம் வந்தது திட்டிவிட்டேன்.

போலிக்கணக்குகளில் முகத்தினை காட்ட முடியாத கோழைகள் மட்டுமே இது போன்று செய்து வருகின்றனர். இவர்களை சமூக வலைத்தளத்தில் இருந்து வெளியேற்றும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.