தற்போது கொரோனா வைரஸ் தாக்குதல் உலகம் முழுக்க அனைத்து நாடுகளை சேர்ந்த மக்களுக்கு சோதனையான சவலாக அமைந்துள்ளது.
இதிலிருந்து அனைவரும் தங்களை காத்துக்கொள்ள தீவிர சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விழிப்புணர்வு பிரச்சாரங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கேரளாவில் பிரபலமான பாடகர் அபிஜித், நடிகை விஸ்மயா ஸ்ரீயை திருமணம் செய்துள்ளார்.
கொல்லம் என்ற ஊரில் இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் அதிகம் யாரையும் திருமணத்திற்கு அழைக்க முடியாத சூழ்நிலையாகிவிட்டது. அதற்கு வருந்துகிறோம் என அவர்கள் அண்மையில் வெளியிட்ட வீடியோவில் கூறியுள்ளனர்.
கொரோனாவிலிருந்து கேரளா விடுபட்ட பின் எல்லோரையும் அழைத்து வரவேற்பு செய்ய திட்டமிட்டுள்ளார்களாம்.
விஸ்மயா தமிழில் உரியடி 2 படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.