படுக்கைக்கு அழைத்ததாக கூறி டிக் டாக் புகழ் நடிகை புகார்!

சினிமாவில் எப்படி நடிக்கும் வாய்ப்பை பெற்றுவிட வேண்டும் என சிலர் தீவிரமாக இருக்கிறார்கள்.இதில் டிக் டாக் செயலியை சிலர் சரியாக பயன்படுத்தி சினிமா வாய்ப்பை பெற்று விடுகிறார்கள்.

அப்படியாக டிக்டாக்கில் பிரபலமானவர் இலக்கியா. சோம்பி என்ற படத்தில் நடித்திருந்தார். சினிமாவில் பட வாய்ப்பு கிடைக்க படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்றும்

தமிழ் சினிமா இயக்குனர்கள் சிலர் தங்கள் படங்களில் நடிக்க வேடம் தருவதாகவும் ஆனால் அதற்கு தங்களுடன் உடல் உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என சொன்னதாகவும் கூறியுள்ளார்.

மேலும் அவர்கள் தன்னை பயன்படுத்திக்கொண்ட பிறகு சொன்னதை செய்யவில்லை என்றும் அவர் அண்மையில் கலந்துகொண்ட நேர்காணலில் கூறியுள்ளார்.