தமிழக அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் விடுத்த கோரிக்கை..!!

நடிகர் ரஜினிகாந்த் இந்திய அளவில் அறியப்படும் மிக பெரிய நடிகராக திகழ்பவர். இவர் நடிப்பில் எந்த திரைப்படம் வெளியானாலும் அது இந்திய அளவில் பேசப்படும்.

தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார்.

இயக்குனர் சிவா இதற்கு முன் இயக்கிய விஸ்வாசம் திரைப்படம் மிக பெரிய வெற்றியடைந்துள்ளதால், இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.

இந்நிலையில் தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் குறித்து இந்தியாவை சேர்ந்த பல பிரபலங்கள் சமுக வலைத்த்யள்ங்களில் மக்களுக்கு தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த்தும் தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் இது குறித்து தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

அதில் “தமிழகத்தில் கொரோனா பாரவமால் தடுக்க அரசு எடுத்து கொண்டிருக்கும் நடவடிக்கை மிகவும் பாராட்டத்தகது, அரசோடு சேர்ந்து மக்களும் ஒத்துழைக்க வேண்டும்.

மேலும், இந்த இக்கட்டான் சூழலில் அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவித்தொகை அளித்தால் பேருதவியாக இருக்கும்” என பதிவிட்டுள்ளார்.