சென்னையில் புளியந்தோப்பு மசூதி தெருவை சேர்ந்த அமீத் அலி என்பவருக்கு மர்லியா பானு என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று இருக்கின்றது. சவுதி அரேபியாவில் இருக்கும் அரசு துறையில் அமித் அலி பணிபுரிந்து வருகின்றார்.
இவர் சவுதி அரேபியாவில் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகின்றார். சவுதி அரேபியாவில் இருந்து, அவருடைய மனைவி மர்லியா பானு ஆன்லைன் மூலமாக புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு புகார் ஒன்றை அனுப்பி இருக்கின்றார்.
அவர் அனுப்பிய புகாரில் விடுமுறை காரணமாக தனித்து சென்னைக்கு சென்ற எனது கணவர் எனக்கு தெரியாமல் வேறு ஒரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இது எனக்கு தெரிய வந்து நான் தட்டி கேட்ட பொழுது என் மீது சுடு தண்ணீரை ஊற்றி கொடுமைப்படுத்துகிறார்.
இவரால் என்னுடைய உயிருக்கு ஆபத்து இருக்கின்றது. தயவு செய்து என்னை அவரிடம் இருந்து மீட்டு எடுங்கள் என்று தெரிவித்திருந்தார். இது குறித்து மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து அமித்தை விரைவில் சென்னை வரவழைத்து விசாரணை நடத்தப்படும்.” என்று உறுதி அளித்தனர்.