காஜல் செய்த வேலை.! கமெண்ட் போட்ட ரசிகர்கள்.!

நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று அனைத்து மொழிகளிலும் தனது தடத்தை பதித்திருக்கிறார்.

இதை தொடர்ந்து, தற்போது தமிழ் சினிமாவின் உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் இந்தியன் 2 படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்திற்காக, மர்ம கலைகளை கற்று தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் என்று கூறப்படுகிறது.

சமீபத்தில் காஜல் அகர்வால் சிறுகுழந்தைபோல தண்ணீர் தொட்டியில் இறங்கி, தண்ணீரை வாரி இறைத்து விளையாடிவரும் காணொளி வெளியாகி வைரலானது. மேலும், அதற்கான புகைப்படங்களும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகின.

இந்த நிலையில், தற்போது அவர் குழந்தை போல தொட்டிலில் ஆடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்றார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் கூடிய சீக்கிரம் குழந்தையா மாறிடுவீங்க போல என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.