தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களான கவுண்டமணி, செந்தில், வடிவேலு ஆகியோருடன் சேர்ந்து குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து பின் முத்த நடிகர் என்ற அந்தஷ்த்தை பெற்றவர் நடிகர் தம்பி ராமையா. மனுநீதி உள்ளிட்ட சில படங்களில் இயக்குநராக இருந்துள்ளார்.
இதை தொடர்ந்து வயது வித்யாசம் எதுவும் பார்க்காமல் சிறிய நடிகர்களுடன் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து அவர்களின் முன்னேற்றத்திற்கு ஒரு துணையாக இருந்துள்ளார். ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 10 படங்களில் நடித்து வெளியாக அவரின் உழைப்பை கொடுப்பவர் நடிகர் தம்பி ராமைய்யா.
இந்நிலையில் இவரின் மகன் உமாபதியை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்துள்ளார். உமாபதி சில படங்களில் நடித்த்திருந்து தற்போது தன் தந்தையின் இயக்கி வரும் சிறுத்தை சிவா என்ற படத்திற்காக உதவி செய்து வருகிறார்.
இப்படத்தின் நடிகை யாஷிகா ஆனந்த் நடித்து வருவதால் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் உமாபதியும் யாஷிகா ஆனந்த்தும் சேர்ந்து சில புகைப்படங்களை எடுத்து கொண்டனர் என்று தம்பி ராமைய்யா கூறியுள்ளார்.
மேலும் என் மகனுக்கு மலேசியாவில் ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்க நினைத்திருக்கிறோம், இதுபோல வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என்றும் நம்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.