மாநகரம் எனும் படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு ஒரு இளம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வெற்றியடைந்தது.
இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கார்த்திகை வைத்து கைதி எனும் படத்தை திரையுலகிற்கு கொடுத்தார்.
இப்படம் நடிகர் கார்த்திக்கின் திரையுலக பயணத்திற்கு மிக முக்கியமான ஒரு படமாக அமைந்தது.
ஆம் இப்படம் வசூல் ரீதியாக மட்டும் ரூபாய் 100 கோடி வசூலித்து நடிகர் கார்த்திக்கு மிக பெரிய பெயரை ரசிகர்கள் மத்தியில் வாங்கி தந்தது.
இதற்கு பிறகு தான் தமிழ் சினிமாவின் தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்க துவங்கினார் லோகேஷ்.
இப்படம் தற்போது ரீலிஸுக்கு தயாராகி விட்டது ஆனால் தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் சில கசப்பான சூழ்நிலை காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தள்ளி போகவும் வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் விஜய்யின் மாஸ்டர் படத்திற்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வாங்கிய சம்பளம் ரூபாய் 3 கோடி என சில தகவல்கள் கசிந்துள்ளது.