சிந்து சமவெளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அமலாபால். தமிழ் சினிமாவில் விஜய், தனுஷ் ஆகிய முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளவர் நடிகை அமலாபால். சமீபத்தில் நடிகர் விஷ்ணுவுடன் அவர் நடித்திருந்த ’ராட்சசன்’ படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. இதனையடுத்து தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் குவிய தொடங்கின.
மேலும், நடிகர் ஆர்யாவுக்கு ஜோடியாக வேட்டை படத்தில் நடித்தார். தலைவா திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாகா நடித்திருந்தார். அந்த திரைப்படத்தின் இயக்குனர் விஜயுடன் ஏற்பட்ட காதலால் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். பின்னர் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்துவிட்டனர். அதன்பிறகு மீண்டும் சினிமாவில் முழுநேரமாக கவனம் செலுத்த தொடங்கியுள்ளார் நடிகை அமலாபால்.
சில மாதங்களுக்கு முன்பு அமலாபால் மீண்டும் காதல் வயப்பட்டு இருந்ததாக தகவல் வெளியானது. ஆனால் அமலாபால் தன் காதல் குறித்து எவ்வித செய்தியும் வெளியிடவில்லை. இந்நிலையில், பாவ்னிந்தர் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமலாபால் திருமணம் செய்துகொண்டதாக புகைப்படம் வெளியிட்டார்.
அந்த பதிவில் Wedding Throwback என்னும் குறிப்பிட்டிருந்தார். பாவ்னிந்தர் சிங் மும்பையை சேர்ந்த பாடகர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து சில நிமிடங்களிலேயே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்த புகைப்படத்தை நீக்கிவிட்டார். சில மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.