என்ன ஒரு தன்னடக்கம்..? பியர் கிறில்ஸ் ரஜினியுடன் செய்த காரியம்.!

டிஸ்கவரி சேனலில் மிகவும் புகழ்பெற்ற நிகழ்ச்சி மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்சி. பியர் க்ரில்ஸ் பல்வேறு காடுகளுக்கும் சென்று அங்கே தனியாக தான் படும் சிரமங்களை கடந்து வாழ்ந்து காட்டுவது தான் இந்த நிகழ்ச்சியில் சுவாரசியம் ஏற்படுத்தும்.

சமீபத்தில் பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். தற்போது ரஜினிகாந்த் பியர் க்ரில்சுடன் தனது பயணத்தை மேற்கொண்டார். இந்த படப்பிடிப்பு பந்திப்பூர் தேசிய பூங்காவின் காட்டுப் பகுதியில் படமாக்கப்பட்டது. ரஜினி பங்கேற்ற இந்த நிகழ்வை காண ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருந்தனர்.

இதனை தொடர்ந்து தற்போது சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வெளியாகி வருகின்றது. இந்த வீடியோவில் தண்ணீர் பிரச்சனை குறித்தும், கே பாலச்சந்தர் குறித்தும், பஸ் கண்டக்டர் வேலை குறித்தும் பல்வேறு கருத்துகளை ரஜினி பியர் கிரில்ஸ்சுடன் பகிர்ந்துகொள்கிறார்.

அப்போது இந்த பயணம் மிகவும் திரில்லான அனுபவம் என்று ரஜினி தெரிவித்து இருக்கின்றார். இதற்கிடையில் ரஜினியின் ஷூ லேஸை பியர் பியர் கிரில்ஸ் கட்டி விடுகிறார் அதற்கான வீடியோ தற்போது வைரல் ஆகி வருகின்றது.