கொரோனா உலகின் பல நாடுகளையும் பீதியடைய செய்து வரும் நிலையில் இது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளில் பல பிரபலங்களும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். அது மட்டுமல்லாமல் தாமாகவே முனைவந்து பலர் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே நடிகை த்ரிஷா மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு ஆகியோர் குறித்த விழிப்புணர்வு பிரசாரங்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான உலக நாயகன் கமல்ஹாசன் விழிப்புணர்வு காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக பேசும் குறித்த காணொளியானது, குறித்த வைரஸ் தாக்கத்தில் இருந்து எவ்வாறு விலகி இருப்பது என்பது பற்றி மக்களுக்கு அறிவுறுத்துவதாக அமைந்துள்ளது.
அத்துடன் விலகி இருத்தலும், அத்தியாவசிய தேவைகள் ஏற்பட்டாலன்றி பயணங்களை தவிர்த்துக்கொள்ளுவதுமே குறித்த வைரஸ் தாக்கத்தில் இருந்து தனி நபரையும், சமூகத்தையும் காப்பாற்றுவதற்கான முக்கிய விடயங்கள் என கமல் அக்காணொளியில் விளக்கியுள்ளமை குறிப்பிட்டுள்ளது.
— Kamal Haasan (@ikamalhaasan) March 21, 2020