மருந்தக உரிமையாளர்களுக்கும் விசேட அறிவித்தல்

குளோரோகுயின் (Chioroquine) மற்றும் ஐரொக்சிகுளொரோகுயின் (Hydroxychioroquine) ஆகிய மாத்திரைகளை விசேட வைத்தியர் ஒருவரின் வலிதான மருந்து சீட்டு இல்லாமல் விற்பனை செய்யக்கூடாது என அனைத்து மருந்தக உரிமையாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின் தலைமை நிர்வாக அதிகாரி விடுத்துள்ளார்.

மேலும் இந்த அறிவிப்பை மீறும் ஒவ்வொரு நபரும் குற்றமிழைத்தவராகவும் அவர்களுக்கு எதிராக 2015 ஆம் ஆண்டின் தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணைய சட்டத்தின் பிரிவு 131 ன் கீழ் வழக்குத் தொடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.