பொதுவாக நாம் முற்பிறவியில் செய்த பாவங்கள் இப்பிறவியில் துன்பத்தை தருகிறது என்று பலரும் செல்லி நாம் கோள்விப்பட்டதுண்டு.
அந்த பாவங்களை சில எளிய பரிகாரங்கள் மூலம் எளிதில் தீர்வு காணலாம்.
அந்தவகையில் தற்போது அந்த பரிகாரங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
அமாவாசை விரதம் கட்டாயம் இருக்க வேண்டும். எள், தண்ணீர் வைத்து முன்னோர்களின் ஆசியை பெற்று கொள்ள வேண்டும்.
பசுவிற்கு வெல்லம், வாழைப்பழம், அகத்தி கீரை போன்றவற்றை கொடுக்கலாம்.
காகத்திற்கு தினமும் மதிய உணவு படைக்க வேண்டும். இது நமது முன் ஜென்ம வினையை குறைக்கும்.
ஏதேனும் ஒரு கோவிலுக்கு சென்று நமது இஷ்ட தெய்வத்தை மனதார வேண்டிக்கொண்டு பின்னர், வீட்டிற்கு வந்து பூஜையறையில் நமது குலதெய்வத்தை மனதார நினைத்து வேண்டிக் கொண்டு அரச மர இலைகளை மூன்று மூன்றாக பிரித்து அதன்மீது உப்பை வைத்து பின்னர் உதிரி பூக்களை அதன் போட்டு அப்படியே அதன் மீது அகல் விளக்குகளை வைத்து 9 அகல் விளக்குகள் வைத்து வழிபடுங்கள்.
இதனை 9 அமாவாசைகள் தொடர்ந்து செய்வதன் மூலம் நம்முடைய பாவ வினைகளில் இருந்து நமக்கு மோட்சம் கிட்டும்.
நாம் கோவிலுக்கு செல்லும் போது சண்டிகேஸ்வரரை கண்டிப்பாக வணங்க வேண்டும். அவரை வேண்டி கொண்டு அன்னதானம் செய்யலாம். அது நமது முன்ஜென்ம பாவங்களை போக்க வல்லது.