வீட்டிலேயே மகனை தனிமைபடுத்திய பிரபல நடிகை…..

பிரபல நடிகை சுஹாசினி வெளிநாட்டில் இருந்து வந்த அவரின் மகனை 14 நாட்களுக்கு அவரின் வீட்டில் தனிமை படுத்தியுள்ளார்.

இது குறித்த காட்சிகள் இணையத்தில் படு வைரலானதில் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

குறித்த காணொளியில் சுஹாசினி பேசியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது,


கண்ணாடிக்கு 10 அடி தள்ளி என் மகன் நந்தனிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். எனது மகன் லண்டனிலிருந்து 18-ம் திகதி சென்னை வந்தார்.

கொரோனா வைரஸ் பரவக் கூடாது என்று வந்ததிலிருந்து இந்த அறைக்குள்தான் இருக்கிறார்.

இன்றுடன் அவர் இந்தியாவுக்கு வந்து 5 நாட்கள் ஆகியுள்ளது. இன்னும் 9 நாட்கள் இருக்கிறது. சாப்பாடு கூட அந்த அறையில் தான் என்று மிகவும் உருக்கமாக பேசியுள்ளார்.

தனிமையாக இருப்பது கொடுமையான விடயம் தான். ஆனால், எல்லாருமே இருந்து தான் ஆக வேண்டும் என்று சுஹாசினி குறிப்பிட்டுள்ளார்.

இந்த காட்சி தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த இணையவாசிகள் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதேவேளை, வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பும் இந்தியர்கள் குறைந்தது 14 நாட்களுக்காவது தன்னை தானே தனிமைபடுத்திக்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.