வடக்கு உட்பட 08 மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் நீக்கம்!

கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் வடமாகணத்திற்கு விதிக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ளது.

கடந்த வார இறுதி முதல் விதிக்கப்பட்ட இந்த ஊரடங்கு சட்டமானது இன்று காலை தளர்த்தப்பட்டது.

எனினும் மீண்டும் அந்த 08 மாவட்டங்களுக்கும் இன்று நண்பகல் 12 மணிமுதல் வரும் 27ம் திகதி வரை ஊரடங்கு சட்டம் நீடிக்கபட்டுள்ளது.

இந்நிலையில் மக்கள் பொருட்களை வாங்குவதற்காக குவிந்தவண்ணம் உள்ளனர்.போக்குவரத்து நெரிசல் மற்றும் பொருட்கள் கொள்வனவு செய்ய முண்டியடிக்கும் மக்களை கட்டுப்படுத்தும் பணியில் பொலிஸார் ஈடுபட்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.

அத்துடன் முகக்கவசம் அணிந்து கொள்ளுமாறும் தவறும் பட்சத்தில் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் அறிவித்தல் விடுத்தவண்ணம் உள்ளனர்.

அதேவேளை ஏனைய மாவட்டங்களில் நேற்று முதல் விதிக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் நாளை மறுதினம் வியாழக்கிழமை காலை 06 மணிவரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.