ஹாலிவுட் நடிகைகளை பாலியல் பலாத்காரம் செய்த ஹார்விக்கு கொரோனா .!!

ஹாலிவுட் திரையுலகின் தயாரிப்பாளர் மற்றும் பல வெற்றி படத்தினை வழங்கிய ஹார்வி வெயின்ஸ்டீன் (Harvey Weinstein) ஆவார். இவர் பல ஹிட்டான படத்தை கொடுத்து பிரபலமடைந்த நபராவார். இந்த நிலையில், இவர் படப்பிடிப்பின் போது பல நடிகைகளுக்கு பாலியல் தொல்லை வழங்கியுள்ளார்.

படப்பிடிப்பு தளத்தில் பாலியல் தொல்லை கொடுத்து, பின்னர் வீட்டிற்கு சென்று பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளான். இவனின் மீதான குற்றச்சாட்டிற்கு பிரபல நடிகைகளான ஏஞ்சலினா ஜோலி, ரோஸ் மெக்கவுன், கெவ்னித் பேல்ட்ரோ போன்ற 90 நடிகைகள் குற்றம் சுமத்தி உறுதி செய்தனர்.

அடுத்தடுத்து தொடுக்கப்பட்ட பல வழக்குகளை அடுத்து, இந்த விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இவனுக்கு மன்ஹாட்டன் குற்றவியல் நீதிமன்றம் 23 வருட சிறை தண்டனையை விதித்து உத்தரவிட்டு இருந்தது. இதன்பின்னர் நியூயார்க் நகரில் இருக்கும் சிறையில் அடைக்கப்பட்டான்.

இந்நிலையில், ஹார்வி வெயின்ஸ்டீனிற்கு கரோனா இருப்பதாக ஏற்கனவே ஊடகத்தில் செய்திகள் வெளியான நிலையில், கடந்த சில நாட்களாகவே காய்ச்சலால் அவதியுற்று வந்த நிலையில், கரோனா தற்போது உறுதியாகியுள்ளது.. பல பெண்களின் மனக்குமுறல் விளையாடவைத்துள்ளது. கர்மா அதிக கோபம் கொண்டது என்று ஹாலிவுட் வட்டாரத்தில் பேச்சு எழத்துவங்கியுள்ளது.