நால்வரால் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி மனமுடைந்து தற்கொலை..!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள யாதகிரி மாவட்டம் சுரபுரா கேம்பாவி கிராமத்தை சார்ந்த தொழிலாளிக்கு 20 வயது மகள் இருக்கிறார். இவர் அங்குள்ள யாதகிரி பகுதியில் உள்ள கல்லூரியில் இரண்டாம் வருடம் பயின்று வருகிறார். இந்த நிலையில், கல்லூரியில் நடைபெற்ற தேர்வை எழுத கடந்த 21 ஆம் தேதியன்று சென்றுள்ளார்.

இவர் தேர்வு எழுதிவிட்டு பின்னர் மீண்டும் மாணவி வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்த நிலையில், 4 பேர் கொண்ட கும்பல் மாணவியை கடத்தி ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

மேலும், இது குறித்து யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டிய நிலையில், மனமுடைந்த மாணவி வீட்டிற்கு வந்து அழுதபடியே இருந்துள்ளார். இவரை பெற்றோர்கள் மேற்கொண்ட விசாரணையை அடுத்து, கூட்டுப்பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளானது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலயில், மாணவி மனமுடைந்து விஷம் குறித்து தற்கொலை செய்துள்ளார்.

இவரை உயிருக்கு போராடும் நிலையில் மீட்ட பெற்றோர்கள், அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தும், மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த காவல் துறையினர் விசாரணையை துரிதப்படுத்தினர்.

இந்த விசாரணையில், இதே கிராமத்தை சார்ந்த காமுகர்கள் ராஜண்ணா சாவண்ணா, தேவேந்திரப்பா, மகேஷ் மற்றும் அனில்குமார் மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. இவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், ராஜண்ணா மற்றும் தேவேந்திரப்பா கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக இருக்கும் மகேஷ் மற்றும் அனில்குமாரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.