வில்லத்தனமான வேடத்தில் மாஸ் காட்ட வரும் அதர்வா.!!

தமிழ் திரையுலகில் எட்டு தொடக்கம் திரைப்படத்தின் மூலமாக மக்களின் பார்வையை தன் மீது விழ வைத்தவர் ஸ்ரீகணேஷ். இவர் அடுத்ததாக இயக்கியுள்ள திரைப்படம் குருதி ஆட்டம். இந்த திரைப்படத்தில் அதர்வா மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்துள்ளனர்.

இதுமட்டுமல்லாது ராதா ரவி, ராதிகா சரத்குமார் ஆகியோரும் நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் அழுத்தமான வேடத்தில் நடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த படம் குறித்து இயக்குனர் ஸ்ரீகணேஷ் தெரிவித்த சமயத்தில்,

இந்த படம் அதிரடி சண்டை காட்சியை கொண்ட படம் ஆகும். இப்படத்தில் 2 தாதாக்களின் கதையை கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. மதுரை நகரினை மையமாக கொண்ட படமாக இது இருக்கும். அதர்வா மற்றும் ராதா ரவி இடையே நடைபெறும் மோதல் மட்டுமே படம்.

அதர்வா, பவானி, ராதிகா மற்றும் ராதா இடையே நடைபெறும் சம்பவங்களை படமாக அமைத்துள்ளோம். பேபி திவ்ய தர்சினி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை தயாரித்து இருக்கிறார். இந்த படம் புதிய அனுபவத்தை தரும் என்று கூறினார்.